ADDED : அக் 02, 2024 03:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் திண்டிவனத்தில் ஆன்லைன் லாட்டரி விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் டவுன் போலீசார் நேற்று முன்தினம் மாலை, மயிலம் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே மொபைல் போன் மூலம் ஆன்லைன் லாட்டரி விற்ற திண்டிவனம் கிடங்கல் (2) பகுதியைச் சேர்ந்த அஜய், 29; என்பவரை கைது செய்து, மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.