தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ திறந்த நிலை பல்கலை கழகம் மாணவர் சேர்க்கை துவங்கியது

திறந்த நிலை பல்கலை கழகம் மாணவர் சேர்க்கை துவங்கியது

திறந்த நிலை பல்கலை கழகம் மாணவர் சேர்க்கை துவங்கியது


ADDED : நவ 08, 2024 05:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 08, 2024 05:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் மூலம் இந்தாண்டு மாணவர் சேர்க்கை விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில் நடக்கிறது.

அரசு கல்லுாரி முதல்வர் சிவக்குமார் செய்திக்குறிப்பு:

தொலைதுார கல்வி படிப்பு தொடர விரும்பும் மாணவ, மாணவிகள் மற்றும் உயர்கல்வியை எதிர்நோக்கி காத்திருக்கும் அலுவலர்களுக்காக இந்த கல்லுாரியில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழகத்தால் அங்கீகரிக்கப்பட்டு சேர்க்கை மையம் இந்த கல்லுாரியில் உள்ளது. இளங்கலை, முதுகலை பாடப்பிரிவுகளுக்கான அனைத்து வகுப்புகளும் சனி, ஞாயிறு ஆகிய நாட்களிலும், பருவ தேர்வுகள் இந்த கல்லுாரியிலேயே நடைபெறும். மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் கல்லுாரி அலுவலகத்தில் பெற்று வரும் 15ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.

அனைத்து மாணவ, மாணவிகள் மற்றும் உயர்கல்வி வாய்ப்பை எதிர்நோக்கி உள்ள அலுவலர்கள் இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி, விழுப்புரம் மாவட்டத்தை நுாறு சதவீத உயர்கல்வி பெற்ற மாவட்டமாக உயர்த்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் மூலம் இளங்கலை பட்டம் பெற்ற பின், யு.பி.எஸ்.சி., - டி.என்.பி.எஸ்.சி., மத்திய, மாநில அரசு போட்டி தேர்வுகளை எழுதலாம். இவர்கள் நேரடியாக முதுகலை படிப்புகளிலும் சேரலாம். முதுகலை படிப்பு முடித்தோர் செட், நெட், கேட் ஆகிய தேர்வுகளை எழுதலாம். நேரடி வகுப்புகளில் பி.எச்டி., படிப்பில் சேரலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us