/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கூட்டேரிப்பட்டில் மயில்பிரீதன் பெட்ரோல் பங்க் திறப்பு விழா
/
கூட்டேரிப்பட்டில் மயில்பிரீதன் பெட்ரோல் பங்க் திறப்பு விழா
கூட்டேரிப்பட்டில் மயில்பிரீதன் பெட்ரோல் பங்க் திறப்பு விழா
கூட்டேரிப்பட்டில் மயில்பிரீதன் பெட்ரோல் பங்க் திறப்பு விழா
ADDED : ஜூன் 09, 2025 11:29 PM

திண்டிவனம்: மயிலம், கூட்டேரிப்பட்டு பி.டி.ஓ., அலுவலகம் அருகே இந்தியன் ஆயில் நிறுவனத்தின், மயில் பிரீதன் பெட்ரோல் பங்க் திறப்பு விழா நேற்று நடந்தது.
கடலுார் எம்.பி., விஷ்ணுபிரசாத் குத்து விளக்கேற்றினார். முன்னாள் அமைச்சர் பொன்முடி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன விற்பனை தலைமை மேலாளர் கார்த்திக், முன்னாள் அமைச்சர் மஸ்தான், சீனியர் மேலாளர்கள் நாகரத்தினம், கரிவிஷ்ணு, மேலாளர் நிஷாந்திவாரி ஆகியோர் வாடிக்கையாளர்களின் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பி விற்பனையை துவக்கி வைத்தனர்.
விழாவில் மயிலம் பொம்மபுரம் ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள், எம்.எல்.ஏ.க்கள் அன்னியூர் சிவா, லட்சுமணன், சிவக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சேதுநாதன், மாசிலாமணி, திருக்கோவிலுார் தொழில் அதிபர் பிரபு, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் மணிமாறன், கல்பட்டுராஜா, செழியன், முருகன், விழுப்புரம் மாவட்ட காங்.,பொருளாளர் கருணாகரன், திண்டிவனம் நகர காங்., தலைவர்கள் திண்டிவனம் விநாயகம், விக்கிரவாண்டி குமார், முன்னாள் மாவட்ட தலைவர் ஆறுமுகம், வட்டார தலைவர்கள் செல்வம், காத்தவராயன், சக்திவேல், சூரியமூர்த்தி, விக்கிரவாண்டி பேரூராட்சி தலைவர் அப்துல்சலாம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவிற்கு வந்திருந்தவர்களை விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., தலைவர் வழக்கறிஞர் ரமேஷ், லாவண்யாரமேஷ், ராம்கிஷோர் வரவேற்றனர்.