/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆரோவில்லில் ரூ.40 லட்சத்தில் கூடைப்பந்து மைதானம் திறப்பு
/
ஆரோவில்லில் ரூ.40 லட்சத்தில் கூடைப்பந்து மைதானம் திறப்பு
ஆரோவில்லில் ரூ.40 லட்சத்தில் கூடைப்பந்து மைதானம் திறப்பு
ஆரோவில்லில் ரூ.40 லட்சத்தில் கூடைப்பந்து மைதானம் திறப்பு
ADDED : நவ 03, 2024 06:34 AM

வானுார்,: ஆரோவில்லில் 40 லட்சம் ரூபாய் செலவில் கூடைப்பந்து மைதானம் திறப்பு விழா நடந்தது.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே, சர்வதேச நகர் ஆரோவில் அமைந்துள்ளது. ஆரோவில்வாசிகள் மற்றும் சுற்றுப்புற கிராம இளைஞர்களிடையே விளையாட்டு திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக, ஆரோவில் அறக்கட்டளை சார்பில், குயிலாப்பாளையம் நியூ கிரேஷனில், 40 லட்சம் ரூபாய் செலவில் கூடைப்பந்து மைதானம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கான பணி கடந்த 2018ம் ஆண்டு துவங்கியது. தற்போது பணி முடிந்த நிலையில், மைதானம் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி, கூடைப்பந்து மைதானத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, ஆரோவில்லின் இளம் பெண்கள் அணியின் நட்பு கூடைப்பந்து போட்டியையும் அவர் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், ஆரோவில் அறக்கட்டளையின் சிறப்பு செயல் அதிகாரி சீத்தாராமன், பாரத் நிவாஸ் அறங்காவலர் ஜென்ம ஜெய், நியூ கிரேஷன் பயிற்சியாளர் ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.