/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாளர் ஓய்வு அறை திறப்பு
/
அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாளர் ஓய்வு அறை திறப்பு
அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாளர் ஓய்வு அறை திறப்பு
அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாளர் ஓய்வு அறை திறப்பு
ADDED : ஜன 24, 2025 06:49 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில், அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கான ஓய்வு அறை திறப்பு விழா நடைபெற்றது.
விழுப்புரம், அரசு போக்குவரத்துக் கழக அலுவலக (பணிமனை-1)கிளையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தனர். அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள், கண்டக்டர்களுக்கான குளிர்சாதன ஓய்வு அறையை, அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்.
இதில், விழுப்புரம் கோட்ட அரசுபோக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் குணசேகரன், பொதுமேலாளர் (தொழில்நுட்பம்), ரவிச்சந்திரன், பொதுமேலாளர் சதீஷ்குமார், துணை மேலாளர் (வணிகம்) சிவக்குமார் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.