/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விரிவாக்கம் செய்யப்பட்ட செஞ்சி பஸ் நிலையம் திறப்பு
/
விரிவாக்கம் செய்யப்பட்ட செஞ்சி பஸ் நிலையம் திறப்பு
விரிவாக்கம் செய்யப்பட்ட செஞ்சி பஸ் நிலையம் திறப்பு
விரிவாக்கம் செய்யப்பட்ட செஞ்சி பஸ் நிலையம் திறப்பு
ADDED : ஜன 05, 2024 12:27 AM

செஞ்சி : செஞ்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பஸ் நிலையம் திறப்பு விழா நடந்தது.
செஞ்சி பஸ் நிலையம், நகரப்புற மேம்பாட்டு திட்டத்தில் 6.74 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது.
அமைச்சர் மஸ்தான் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் பிச்சாண்டி, ஆரணி தொகுதி எம்.பி., விஷ்ணுபிரசாத் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி சேர்மன் மொக்தியார் வரவேற்றார்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு பஸ் நிலையத்தை திறந்து வைத்து, பஸ்களை கொடியசைத்து இயக்கி வைத்தார். பேரூராட்சிகள் இயக்குனர் கிரண் குராலா திட்ட விளக்க உரை நிகழ்த்தினார்.
ஒன்றிய சேர்மன்கள் விஜயகுமார், கண்மணி நெடுஞ்செழியன் வாழ்த்திப் பேசினர்.
முன்னாள் எல்.எல்.ஏ., செந்தமிழ்ச்செல்வன், தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார், பேரூராட்சிகள் கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன், உதவி இயக்குனர் வெங்கடேசன்.
மாவட்ட கவுன்சிலர் ஏழுமலை, ஒன்றிய துணைச் சேர்மன் ஜெயபாலன், பேரூராட்சி துணைத் தலைவர் ராஜலட்சுமி செயல்மணி மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர். செயல் அலுவலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.