/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏரி நீரை திறந்ததால்: நெல் அறுவடை பாதிப்பு
/
ஏரி நீரை திறந்ததால்: நெல் அறுவடை பாதிப்பு
ADDED : மார் 28, 2025 06:40 AM

விழுப்புரம் : விழுப்புரம் அருகே மீன் வளர்ப்பு குத்தகை எடுத்தவர்கள், விதி மீறி ஏரி நீரை திறந்துவிட்டதால், நெல் வயல்களில் தேங்கி அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் அடுத்த கண்டம்பாக்கம் ஏரியில் மீன் வளர்க்க குத்தகை எடுத்தவர்கள், மீன் பிடிக்க தண்ணீரை திறந்து விட்டுள்ளனர்.
இந்த தண்ணீர் சுற்றியுள்ள வயல்வெளி பகுதிகளில் தேங்கியது. ஏரியின் முன் பகுதியில் இருந்த சம்பா பருவ நெல் அறுவடை முடிந்துள்ள நிலையில், அதன் கடைசி பகுதியில் தற்போது நெல் அறுவடை நடந்து வருகிறது.
இந்நிலையில், திடீரென ஏரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், அங்குள்ள 50 ஏக்கர் அளவிலான நெற்பயிர்களில் தண்ணீர் சூழ்ந்து, அறுவடை பணி பாதித்துள்ளது. இதனால் விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.