/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகள் திறப்பு: 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
/
மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகள் திறப்பு: 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகள் திறப்பு: 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகள் திறப்பு: 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
ADDED : டிச 10, 2024 07:03 AM

விழுப்புரம் மாவட்டத்தில், பெஞ்சல் புயல், கனமழை காரணமாக 10 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டன. சேதமடைந்த 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், பெஞ்சல் புயல் கனமழை காரணமாக, கடந்த 29ம் தேதி தொடங்கி பள்ளி, கல்லுாரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. கடும் வெள்ள சேதம் காரணமாகவும், தென்பெண்ணை, மலட்டாறு, வராகநதி ஆற்றுநீர் புகுந்ததால், பல பள்ளிகளில் மழை நீர் தேங்கி், சேறும் சகதியுமாக பாதிக்கப்பட்டன.
குறிப்பாக, தளவானுார், திருவெண்ணைநல்லுார், மரக்காணம் பகுதியில் உள்ள பல அரசு பள்ளிகள் அதிகளவில் சேதமடைந்தன.
மேலும், பல அரசு கல்லுாரி வளாகங்களிலும் மழைநீர் தேங்கியதால், தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து 10 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, நேற்று பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். முன்னதாக கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் பள்ளி வளாகங்களை பார்வையிட்டு, மாணவர்களை அனுமதித்தனர்.
மாவட்டத்தில் வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்த 7 அரசு பள்ளிகளுக்கு மட்டும், மறு அறிவிப்பு வரும் வரை மீண்டும் விடுமுறை அளித்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி திருவெண்ணைநல்லுார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, சிறுமதுரை ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளி, மரக்காணம் ஒன்றியம் ஓமந்துார் ஒன்றிய தொடக்கப் பள்ளி, நாரவாக்கம் ஒன்றிய தொடக்கப் பள்ளி, கந்தாடு அரசு ஆதிதிராவிடர் நலதொடக்கப் பள்ளி, வண்டிப்பாளையம் ஒன்றிய தொடக்கப் பள்ளி, கீழ்சித்தாமூர் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப் பள்ளி ஆகிய 7 பள்ளிகளுக்கு விடுமுறை தொடர்கிறது.
வெள்ளத்தால் சேதமடைந்த இந்த பள்ளிகளில் மறுசீரமைப்பு மற்றும் துாய்மைப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
பணிகள் முடிந்த பிறகு, பள்ளிகள் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்படும் என முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் தெரிவித்துள்ளார்.