ADDED : ஏப் 07, 2025 06:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம், முகையூர் கிழக்கு ஒன்றிய த.வெ.க., சார்பில் 14 இடங்களில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
கோடை வெயிலையொட்டி, அடுக்கம், வடகரைதாழனுார், புத்துார், ஏமப்பேர், கீழ்கொண்டூர், வீரசோழபுரம், சென்னாகுணம், செங்கமேடு, வீரங்கிபுரம், ஒதியந்துார், வி.புதுார் கிராமங்களில் நடந்த நிகழ்ச்சிக்கு, கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் பரணிபாலாஜி, தலைமை தாங்கி நீர்மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர், பழங்களை வழங்கினார்.
முகையூர் கிழக்கு ஒன்றிய தலைவர் ரஷீத் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் தண்டபாணி, பாஸ்கர், பாஸ்கரன், சரண்ராஜ், ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.

