/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓ.பி.எஸ்.,தி.மு.க.,வில் சேர்ந்ததற்கு எதிர்ப்பு: மாஜி எம்.பி.,விலகல்
/
ஓ.பி.எஸ்.,தி.மு.க.,வில் சேர்ந்ததற்கு எதிர்ப்பு: மாஜி எம்.பி.,விலகல்
ஓ.பி.எஸ்.,தி.மு.க.,வில் சேர்ந்ததற்கு எதிர்ப்பு: மாஜி எம்.பி.,விலகல்
ஓ.பி.எஸ்.,தி.மு.க.,வில் சேர்ந்ததற்கு எதிர்ப்பு: மாஜி எம்.பி.,விலகல்
ADDED : பிப் 28, 2026 04:51 AM
செஞ்சி,முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.தி.மு.க.,வில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் எம்.பி.,விலகினார்.
செஞ்சியை சேர்ந்த அ.தி.மு.க, முன்னாள் எம்.பி., ஏழுமலை 2021 சட்டசபை தேர்தலின் போது கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டார். மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைவதற்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காததால் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தின் உரிமை மீட்பு குழுவில் இணைந்து, விழுப்புரம் மாவட்ட செயலாளராக இருந்தார்.
இதற்கிடையே சட்டசபையில் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அத்துடன் பன்னீர் செல்வம் தி.மு.க.,வில் இணைய உள்ளதாகவும் செய்திகள் வெளியானது.
இதை தொடர்ந்து நேற்று முன்தினம் செஞ்சியில் ஜெ., பிறந்த நாள் விழா கொண்டாடிய ஏழுமலை அதில் பன்னீர் செல்வம் படம் இல்லாமல் விழா நடத்தினார். தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இது குறித்து முன்னாள் எம்.பி., கூறும் போது, ' எம்.ஜி.ஆர்., ஜெ., வழியில் வந்த நான், ஓ.பி.எஸ்.,, தி.மு.க.,வில் இணைவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பா.ஜ., த.வெ.க., உட்பட எந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை. அ.தி.மு.க.,வில் இணைந்து மீண்டும் கட்சி பணியற்றுவதற்காக காத்திருக்கின்றேன்' என தெரிவித்தார்.

