/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு: எம்.எல்.ஏ., பேச்சுவார்த்தை
/
ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு: எம்.எல்.ஏ., பேச்சுவார்த்தை
ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு: எம்.எல்.ஏ., பேச்சுவார்த்தை
ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு: எம்.எல்.ஏ., பேச்சுவார்த்தை
ADDED : ஜூலை 29, 2025 10:36 PM

திண்டிவனம்; தீர்த்தக்குளத்தில் பொதுமக்களிடம் எம்.எல்.ஏ., பேச்சுவார்த்தை நடத்தினார்.
திண்டிவனம், திந்திரிணீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தீர்த்தக்குளத்தை சுற்றியுள்ள 64 வீடுகள், கடைகள் உள்ளிட்டவைகள் ஐகோர்ட் உத்தரவுப்படி கடந்த, 25ம் தேதி அகற்றும் பணி துவங்கியது.
மாற்று இடம் வழங்கிவிட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தீர்த்தக்குளம் பகுதி மக்களை, அர்ஜூனன் எம்.எல்.ஏ., நேற்று சந்தித்தார்.
அப்போது மக்கள் நகரப் பகுதியிலேயே மாற்று இடம் வழங்க கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அவர், மாற்று இடம் குறித்து கலெக்டர் மற்றும் தாசில்தாரிடம் மொபைல் போனில் பேசினார். மேலும், கலெக்டரை நேரில் சந்தித்து பேச உள்ளதாகவும், மாற்று இடம் வழங்கும் வரை, ஆக்கிரமிப்புகள் அகற்றுவதை தள்ளி வைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில், முன்னாள் நகர்மன்ற தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர்கள் சரவணன், கார்த்திக், ஜனார்த்தனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.