/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓ.பி.ஆர்., சிலைக்கு கட்சியினர் மரியாதை
/
ஓ.பி.ஆர்., சிலைக்கு கட்சியினர் மரியாதை
ADDED : பிப் 04, 2024 04:48 AM

திண்டிவனம் : திண்டிவனம் அருகே ஒமந்துாரில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பி.ஆர்.சிலைக்கு அனைத்து கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மணிமண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், தி.மு.க., சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, வடக்கு மாவட்ட பொருளாளர் ரமணன், அவைத்தலைவர் சேகர், மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார், திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன், துணைச் சேர்மன் பழனி பங்கேற்றனர்.
அ.தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ.,க்கள் அர்ஜூனன், சக்கரபாணி, மாவட்ட பாசறை செயலாளர் ஜெயப்பிரகாஷ், காங்., சார்பில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் மற்றும் ரெட்டியார் சங்கம் சார்பில் திண்டிவனம் ஆர்யாஸ் ஓட்டல் உரிமையாளர் ராமகிருஷ்ணன் மாலை அணிவித்தனர்.
பா.ஜ.,சார்பில் மாநில பொதுச் செயலாளர் சீனுவாசன், ஸ்ரீராம் பள்ளி முதல்வர் முரளி ரகுராமன், மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாநில வர்த்தகர் அணி துணைத் தலைவர் ஜின்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.