/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மினி பஸ் சேவைக்கான ஆணை வழங்கல் 2 வழித்தடங்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு

ADDED : ஏப் 05, 2025 04:37 AM

விழுப்புரம்: திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட மினி பஸ் சேவை வழித்தடங்களுக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரத்தில் நடந்தது.
விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார்.
இதில், 62 வழித்தடங்களில், 2 வழித்தடங்களுக்கு ஒன்றுக்கு மேற் பட்டோர் விண்ணப்பித்தனர். இந்த 2 வழித்தடங்களுக்கு குலுக்கல் நடத்தப்பட்டு தேர்வானவர்களுக்கு இந்த வழித்தடத்தில் மினி பஸ் போக்குவரத்து சேவை புரிவதற்கான ஆணை வழங்கப்பட்டது.
மேலும், போட்டியில்லாத வழித்தடத்திற்கு 60 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நபர்களுக்கு போட்டியின்றி தேர்வு செய்து, அவர்களுக்கு மினி பஸ் போக்குவரத்து சேவை புரிவதற்கான ஆணை வழங்கப்பட்டது.
திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் உட்பட அலுவலர்கள் பங்கேற்றனர்.