/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'மாஜி' அரசு ஊழியருக்கு நஷ்ட ஈடு காப்பீட்டு நிறுவனம் வழங்க உத்தரவு
/
'மாஜி' அரசு ஊழியருக்கு நஷ்ட ஈடு காப்பீட்டு நிறுவனம் வழங்க உத்தரவு
'மாஜி' அரசு ஊழியருக்கு நஷ்ட ஈடு காப்பீட்டு நிறுவனம் வழங்க உத்தரவு
'மாஜி' அரசு ஊழியருக்கு நஷ்ட ஈடு காப்பீட்டு நிறுவனம் வழங்க உத்தரவு
ADDED : ஜன 14, 2024 06:18 AM
விழுப்புரம், : ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு காப்பீட்டு நிறுவனம் நஷ்டஈடு வழங்க விழுப்புரம் நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.
விழுப்புரம் ஆர்.பி., நகரைச் சேர்ந்தவர் கண்ணன். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தில் சந்தா தொகை பிடித்தம் செய்யப்படுகிறது.
இவர் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் வயிற்று வலியால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பித்தப்பையில் இருந்த கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இதற்கு 75 ஆயிரத்து 500 ரூபாய் மருத்துவ செலவானது.
இந்த தொகையை காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து பெற்றுத்தரக் கோரி கண்ணன், மாவட்ட கருவூல அலுவலரிடம் மனு அளித்தார். 6 மாதங்கள் கழித்து கண்ணனின் வங்கிக் கணக்கிற்கு 16 ஆயிரத்து 380 ரூபாய் மட்டும் காப்பீட்டு நிறுவனம் வரவு வைத்தது. மீதி தொகையை கேட்டு அவர் பலமுறை காப்பீட்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டும் எவ்வித பதிலும் இல்லை.
இதனால், விழுப்புரம் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சதீஷ்குமார், உறுப்பினர்கள் மீராமொய்தீன், அமலா ஆகியோர், கண்ணனுக்கு சேர வேண்டிய நிலுவை தொகை 59 ஆயிரத்து 120 ரூபாயை ஆண்டிற்கு 9 சதவீதம் வட்டியோடு சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனம் வழங்க உத்தரவிட்டனர்.
மேலும், சேவை குறைபாடு செய்துள்ள காப்பீட்டு நிறுவனம், கண்ணனின் மனஉளைச்சலுக்கு இழப்பீடாக 20 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவாக 5,000 ரூபாய் என 25 ஆயிரம் ரூபாயை தீர்ப்பு வெளியான தேதியில் இருந்து 45 நாட்களுக்குள் வழங்க உத்தரவிட்டனர்.

