/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆக்கிரமிப்பு கெஸ்ட் ஹவுஸ்களை அகற்ற உத்தரவு! ஆரோ பீச் ஆய்வின்போது கலெக்டர் அதிரடி
/
ஆக்கிரமிப்பு கெஸ்ட் ஹவுஸ்களை அகற்ற உத்தரவு! ஆரோ பீச் ஆய்வின்போது கலெக்டர் அதிரடி
ஆக்கிரமிப்பு கெஸ்ட் ஹவுஸ்களை அகற்ற உத்தரவு! ஆரோ பீச் ஆய்வின்போது கலெக்டர் அதிரடி
ஆக்கிரமிப்பு கெஸ்ட் ஹவுஸ்களை அகற்ற உத்தரவு! ஆரோ பீச் ஆய்வின்போது கலெக்டர் அதிரடி
ADDED : மார் 13, 2025 06:39 AM

கோட்டக்குப்பம்: சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்லும், 'ஆரோ பீச்'சில் குவிந்து கிடந்த குப்பைகளை உடனடியாக அகற்றவும், கடற்கரையோரம் பட்டா இல்லாமல் செயல்படும் கெஸ்ட் ஹவுஸ்களை அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு கலெக்டர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையார்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பெரிய முதலியார்சாவடியில் ஆரோ பீச் அமைந்துள்ளது. இங்கு தினந்தோறும் ஏராமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியில் கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அப்பகுதியில் கற்டகரையோரம் குவியல் குவியலாக கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அவருடன் வந்த அதிகாரிகளை அழைத்து, சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் இடமாக உள்ளது.
இதுபோன்று சுத்தமில்லாமல் வைத்திருந்தால், எந்த நம்பிக்கையில் சுற்றுலாப்பயணிகள் பீச்சுக்கு வருவார்கள்.
சுற்றுலாப் பயணிகள் வரும் இந்த பகுதியே சுத்தமில்லாமல் இருந்தால், ஊருக்குள் எப்படி சுத்தமாக வைத்திருக்க போகிறீர்கள் என கடிந்து கொண்டார்.
இந்த பகுதியில் சாலை அமைப்பதற்கு அளிக்கும் முக்கியத்துவத்திற்கு, குப்பைகளை தூர்வாருவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
தொடர்ந்து ஆரோ பீச்சில் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்றி விட்டு எனக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து அவர் தந்திராயன்குப்பம் கடற்கரை பகுதியில் துாண்டில் முள்வளைவு அமைக்கப்பட்டதை ஆய்வு செய்து, மீனவர்களின் மீன்பிடி படகுகள் நிறுத்தும் இடங்களை பார்வையிட்டார்.
அப்போது, கடற்கரையோரம் ஆங்காங்கே வரிசை கட்டி புற்றீசல் போல் கட்டப்பட்டிருந்த தனியார் கெஸ்ட் ஹவுஸ்கள், பட்டா இடத்தில் கட்டப்பட்டுள்ளதா என்று நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டார்.
பட்டா இடத்தில் இருக்கும் கெஸ்ட் ஹவுஸ்களுக்கு வரி வசூலிப்பதாகவும், ஒரு சில இடங்களில் ஆக்கிரமித்து கெஸ்ட் ஹவுஸ்கள் செயல்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதுபோன்று, முறையாக பட்டா இல்லாமலும், வரி செலுத்தாமல் செயல்படும் கெஸ்ட் ஹவுஸ்களை கண்டறிந்து அப்புறப்படுத்த வேண்டும் என நகராட்சி ஆணையர் புகழேந்திக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து அவர் கீழ்புத்துப்பட்டு முகாம்வாழ் இலங்கை தமிழ்களுக்கு ரூ. 23.4 கோடி மதிப்பீட்டில் குடியிருப்பு வீடுகள், அப்பகுதியில் உள்ள குழந்தைகள் மையத்தை ஆய்வு செய்தார்.
குழந்தைகளின் வயதிற்கேற்ற எடை, உயரம் குறித்தும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுப்பட்டியல் குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, ஊரக வளர்ச்சித்துறை செற்பொறியாளர் ராஜா, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், தாசில்தார்கள் நாராயணமூர்த்தி, பழனி, வானுார் பி.டி.ஓ.,க்கள் கார்த்திகேயன், தேவதாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.