/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மினி டைடல் பார்க் அருகே குவிந்துள்ள குப்பைகளை அகற்ற உத்தரவு
/
மினி டைடல் பார்க் அருகே குவிந்துள்ள குப்பைகளை அகற்ற உத்தரவு
மினி டைடல் பார்க் அருகே குவிந்துள்ள குப்பைகளை அகற்ற உத்தரவு
மினி டைடல் பார்க் அருகே குவிந்துள்ள குப்பைகளை அகற்ற உத்தரவு
ADDED : நவ 29, 2024 05:01 AM
வானுார்: வானுார் மினி டைடல் பார்க் அமைந்துள்ள சாலையில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
வானுார் ஊராட்சி ஒன்றியம், திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட மயிலம் ரோட்டில் மினி டைடல் பார்க் அமைந்துள்ளது.
இந்த சாலையோரம் அதிகளவில் குப்பைகள் குவிந்து துர்நாற்றம் வீசியதால் பொது மக்கள் அவதிக்குள்ளாகினர்.
இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் சென்றது. இதையொட்டி நேற்று மாவட்ட கலெக்டர் பழனி அப்பகுதியில் ஆய்வு செய்தர். அப்போது, சாலையில் மழைநீர் வடியும் வகையில் ஓடைகளை சீரமைத்திடவும், குப்பைகள் தேங்காமல் அகற்றுவதற்கான நடவடிக்கைகள், சாலையோர மின்விளக்கு வசதி மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, வானுார் தாசில்தார் நாராயணமூர்த்தி, பி.டி.ஓ., கார்த்திகேயன், திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன் உட்பட பலர் இருந்தனர்.