/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் கட்டுமான பணி: அமைச்சர் ஆய்வு
/
ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் கட்டுமான பணி: அமைச்சர் ஆய்வு
ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் கட்டுமான பணி: அமைச்சர் ஆய்வு
ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் கட்டுமான பணி: அமைச்சர் ஆய்வு
ADDED : செப் 23, 2024 05:05 AM

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுாரில் கட்டப்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் கட்டுமான பணியை அமைச்சர் ஆய்வு செய்தார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சின்னசெவலை ஊராட்சியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட ஒழுங்கு முறை விற்பனைக் கூட கட்டடம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியை, அமைச்சர் பொன்முடி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து தற்போது வரை நடைபெற்றுள்ள பணிகள் குறித்து கேட்டறிந்த கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்பட்டு வரும் பொருட்களின் தரம் குறித்து கேட் டறிந்தார்.
மேலும், பணியை விரைந்து முடித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, கலெக்டர் பழனி, முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணி, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல், மாவட்ட கவுன்சிலர் விஸ்வநாதன், தாசில்தார் செந்தில்குமார், பி.டி.ஓ., பாலசுப்ரமணியம் உடனிருந்தனர்.