/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் பொறியியல் கல்லுாரியில் வழிகாட்டு நிகழ்ச்சி
/
மயிலம் பொறியியல் கல்லுாரியில் வழிகாட்டு நிகழ்ச்சி
மயிலம் பொறியியல் கல்லுாரியில் வழிகாட்டு நிகழ்ச்சி
மயிலம் பொறியியல் கல்லுாரியில் வழிகாட்டு நிகழ்ச்சி
ADDED : ஜன 28, 2026 06:16 AM

விழுப்புரம், ஜன. 28-
மயிலம் பொறியியல் கல்லுாரியில் பிளஸ் 2 மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்கான .உத்திகள் குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலம் கல்விக்குழுமம் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். கல்லுாரி செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம் ் முன்னிலை வகித்தனர்.
'சி4சி' தலைப்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில், இயற்பியல், வேதியியல் மற்றும் கணித பாடங்களில் நுாறு மதிப்பெண் எப்படி பெறுதல் என்பது குறித்த வழிகாட்டுதல்கள், ஆலோசனைகள் மற்றும் அதற்கான உத்திகள் குறித்து சிறந்து ஆசிரியர்கள் மூலம் விளக்கி கூறப்பட்டது.
நெய்வேலி என்.எல்.சி., பெண்கள் மேல்நிலை பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பாலகுருநாதன், வேதியியல் பாடத்திற்கும், வழுதாவூர் அரசு மேல்நிலை பள்ளி துணை தலைமை ஆசிரியர் திருமுருகன், கணிதம் பாடத்திற்கும், தேப்பிரம்பட்டு அரசு மேல்நிலை பள்ளி முதுநிலை ஆசிரியர் ஏழுமலை, இயற்பியல் பாடத்திற்கும் பயிற்சி அளித்து மாணவர்கள் நுாறு மதிப்பெண்கள் பெறும் உத்திகளை கூறினர்.
இதில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மிண்ணுவியல் மற்றும் தொலைதொடர்பு துறை தலைவர் கணேசன் நன்றி கூறினார்.

