/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிலம்பம் சுற்றுவதில் ஆஸ்கர் ஏழை மாணவர் சாதனை
/
சிலம்பம் சுற்றுவதில் ஆஸ்கர் ஏழை மாணவர் சாதனை
ADDED : மார் 27, 2025 04:10 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே சிலம்பம் கலையில் ஆஸ்கர் சாதனை படைத்த குடுகுடுப்பை சமூகத்தை சேர்ந்த மாணவனை ஆசிரியர்கள் பாராட்டினர். .
விக்கிரவாண்டி ஒன்றியம் நேமூர் கிராமத்தில் குடுகுடுப்பை தொழில் செய்துவருபவர்கள் சுமார் 30 க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் .அச்சமுகத்தை சேர்ந்தவர்கள் யாரும் விளையாட்டுத் துறையில் ஈடுபாடு இன்றி இருப்பார்கள். தங்களது தொழிலான குடுகுடுப்பையை செய்ய சிறுவர்களுக்கு கற்று தருவது வழக்கம் . முட்டத்துார் ஒய்காப் மேல்நிலைப்பள்ளியில் குடுகுடுப்பை சமூகத்தை சேர்ந்த மாணவர் ராஜசேகர்,13: எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் விளையாட்டு துறையில் மாநில அளவிலும் ,மாவட்ட அளவிலும் சாதனைகள் பல செய்துள்ளார்.
இவரது தந்தை ராமச்சந்திரன் கூறும் போது எனது முழு முயற்சியும் ஆசையும் இதுதான்.
என் மகன் சிலம்பம் கலையை கற்றுக்கொண்டு வெற்றி பெற்று பல மேடைகள் ஏற வேண்டும்.
எங்கள் சமூகத்திற்கு இவன் கல்வி மற்றும் விளையாட்டில் முன் உதாரணமாக திகழ வேண்டும்.
மாணவர் ராஜசேகர் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த போட்டியில் 13 வயது பிரிவில் மாவட்ட அளவில் மூன்றாம் இடமும் , புதுவை மாநிலம், விழுப்புரத்தில் நடந்த மாநில அளவிலான போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளார், சிலம்பம் விளையாட்டில் தொடர்ந்து ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை செய்து ஆஸ்கர் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். மாணவர் ராஜசேகரை பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள், பயிற்சியாளர் சுரேந்தர் ஆகியோர் பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தனர்.