/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முத்தாம்பாளையம், அரசூரில் மேம்பாலம் பணி... தீவிரம்: விரைந்து முடிக்க நகாய் அதிகாரிகள் நடவடிக்கை
/
முத்தாம்பாளையம், அரசூரில் மேம்பாலம் பணி... தீவிரம்: விரைந்து முடிக்க நகாய் அதிகாரிகள் நடவடிக்கை
முத்தாம்பாளையம், அரசூரில் மேம்பாலம் பணி... தீவிரம்: விரைந்து முடிக்க நகாய் அதிகாரிகள் நடவடிக்கை
முத்தாம்பாளையம், அரசூரில் மேம்பாலம் பணி... தீவிரம்: விரைந்து முடிக்க நகாய் அதிகாரிகள் நடவடிக்கை
ADDED : ஆக 29, 2025 12:16 AM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு இடங்களில் மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையானது, விழுப்புரம் மாவட்ட எல்லையான ஓங்கூரில் துவங்கி, அரசூர் அடுத்த சித்தானங்கூர் வரை 75 கி.மீ., துாரம் செல்கிறது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது விபத்தில் மாநிலத்தில் முதலிடம் அல்லது இரண்டாம் இடத்தில் விழுப்புரம் இருந்தது. இந்த விபத்துக்கள் அதிகளவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்தது.
இதனால், இச்சாலையில் அதிக விபத்துக்கள் நடக்கும் இடங்களை நகாய் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கண்டறிந்தனர்.
அந்த இடங்களில் பேரிகார்டுகள், ைஹமாஸ் விளக்குகள், சிக்னல் பிளிங்கர்கள் அமைத்து விபத்து தடுப்பு நடவடிக்கையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டனர்.
இதில், விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் எதிரில், முண்டியம்பாக்கம், விழுப்புரம் அருகே முத்தாம்பாளையம் கூட்ரோடு, எல்லீஸ்சத்திரம் பை பாஸ் சாலை கூட்ரோடு, அரசூர் கூட்ரோடு ஆகிய இடங்கள் அதிக விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டது. இதனால், இந்த பகுதி களில் மேம்பாலம் அமைக்க பல்வேறு தரப்பி னரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, 27 கோடி ரூபாயில் முத்தாம்பாளையம் கூட்ரோட்டிலும், 49 கோடி ரூபாயில் அரசூர் கூட்ரோட்டிலும் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு நகாய் நிதி ஒதுக்கியது.
இதற்கான இடம் கையகப்படுத்தி மேம்பாலம் அமைக்கும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது. இதில், முத்தாம்பாளையத்தில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் பணி முடிக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
இதனால், முத்தாம்பாளையம் கூட்ரோட்டில், மேம்பாலத்திற்கான ராட்சத துாண்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சாலையின் இருபுறங்களிலும் இணைப்பு சாலைகள் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக சிலாப்கள் பொருத்தி, மண் கொட்டி சமன் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது இங்கு 50 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது.
இதேபோன்று, அரசூர் கூட்ரோட்டிலும் மேம்பாலத்திற்கான ராட்சத துாண் கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது.
மேலும், மலட்டாற்றில் பாலம் கட்டும் பணியும், இருவேல்பட்டு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
இங்கு தற்போது வரை 25 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த இரண்டு இடங்களிலும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக நகாய் அதிகாரிகள் கூறினர்.

