
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த தும்பூரில் தி.மு.க., சார்பில் திண்ணை பிரசாரம் நடந்தது.
தெற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., தலைமை தாங்கி வீடுகள் தோறும் 'ஸ்டாலின் குரல்' என்ற துண்டு பிரசுரம் வழங்கி, தமிழக அரசின் சாதனைகளை எடுத்து கூறி பிரசாரம் செய்தார்.மத்திய ஒன்றிய செயலாளர் ஜெயபால், பொருளாளர் முரளி, கவுன்சிலர் செல்வம், மாவட்ட பிரதிநிதி வேல்முருகன், கண்காணிப்புக் குழு எத்திராசன், துணைச் செயலாளர்கள் சாவித்திரி பாலு, ராம்குமார், இலக்கிய அணி துணை அமைப்பாளர் கலைச்செல்வன், இளைஞர் அணி பாலகிருஷ்ணன், அசோக், சங்கர் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

