ADDED : பிப் 09, 2026 04:21 AM

அ நிறம் | அளவு
செஞ்சி: செஞ்சி அடுத்த சத்தியமங்கலம், நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு விழா நடந்தது.
ஊராட்சி தலைவர்கள் அபர்ணா ரவிசங்கர், குமரவேல் தலைமை தாங்கினர். ஒன்றிய கவுன்சிலர்கள் டிலைட், முரளி முன்னிலை வகித்தனர். ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தனர்.
ஒன்றிய நிர்வாகிகள் வாசு, அய்யாதுரை, கதிரவன், திருவேங்கடம், சங்கர், சாதிக், சுப்ரமணி, முன்னாள் தலைவர் ரஞ்சித்குமார், மகளிர் அணி சுதா பாஸ்கரன், பொறியாளர் அணி சிவப்பிரகாசம், ஸ்டீபன் உட்பட பலர் பங்கேற்றனர்.
