/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தர்மசாஸ்தா கோவிலில் படி பூஜை விழா
/
தர்மசாஸ்தா கோவிலில் படி பூஜை விழா
ADDED : ஜன 18, 2024 04:17 AM

செஞ்சி: நல்லாண் பிள்ளை பெற்றாள் தர்மசாஸ்தா கோவிலில் மகர ஜோதியை முன்னிட்டு படி பூஜை விழா நடந்தது.
செஞ்சி அடுத்த நல்லாண் பிள்ளை பெற்றாள் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் மூன்றாம் ஆண்டு மகரஜோதி மற்றும் படி பூஜை பெருவிழா நடந்தது.
இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 10 மணிக்கு நெய்யபிஷேகமும் நடைபெற்றது.
மதியம் மூன்று மணிக்கு 18 படி வேள்வி பூஜை நடைபெற்றது.
மாலை 6.30 மணிக்கு மகேந்திரன் தலைமையில் மகரஜோதி ஏற்றப்பட்டு மாபெரும் தீபாராதனை நடந்தது.
இரவு 8 மணிக்கு செண்டை மேளம், மேளதாளம் முழுங்க மின் அலங்காரத்தில தர்ம சாஸ்தா ஐயப்பன் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரவு 10 மணியளவில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் ஐயப்ப பக்தர்கள் இளைஞர்கள் என 2000க்கும் மேற்பட்டவர்கள் திரளாக கலந்து கொண்டு ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்தனர்.