ADDED : மார் 04, 2024 12:16 AM

அ நிறம் | அளவு
திண்டிவனம் :
திண்டிவனம் காவேரிப்பாக்கம் ஏரிக்கரையோரம் நேற்று மாலை மரத்தில் துாக்கில் தொங்கி இறந்த நபர் குறித்து போலீசுக்கு தகவல் தெரிந்தது.
திண்டிவனம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், துாக்கு போட்டு இறந்தது திண்டிவனம் கிடங்கல் (2) ராஜன் தெருவைச் சேர்ந்த கார்த்திக், 26; பெயிண்டர் என்பதும்; பெற்றோர் இல்லாததால் அண்ணன் துரை என்பவர் வீட்டில் வசித்து வந்ததும் தெரியவந்தது.
கார்த்திக் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
