sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசுக்கான வருவாய் ஒரு குடும்பத்திற்கே செல்கிறது பழனிசாமி குற்றச்சாட்டு

/

அரசுக்கான வருவாய் ஒரு குடும்பத்திற்கே செல்கிறது பழனிசாமி குற்றச்சாட்டு

அரசுக்கான வருவாய் ஒரு குடும்பத்திற்கே செல்கிறது பழனிசாமி குற்றச்சாட்டு

அரசுக்கான வருவாய் ஒரு குடும்பத்திற்கே செல்கிறது பழனிசாமி குற்றச்சாட்டு


ADDED : ஜூலை 11, 2025 05:26 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: மாநில அரசுக்கான வருவாய் ஒரு குடும்பத்திற்கே செல்வதால் நிதி நெருக்கடியில் தமிழக அரசு தவிப்பதாக அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி விமர்சித்தார்.

விக்கிரவாண்டியில் நேற்று இரவு நடந்த மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரசார கூட்டத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

தி.மு.க., ஆட்சிக்கு வந்து 50 மாதங்களில் என்ன செய்தது? அ.தி.மு.க., கொண்டு வந்த திட்டங்களை ரத்து செய்தது. அம்மா மினி கிளினிக்கை மூடினர். கிராமப்புற மக்கள் நோய் வாய்ப்பட்டால் சிகிச்சை பெற தொடங்கியதை முடக்கிவிட்டனர்.

விவசாயிகளுக்கு கடன் ரத்து, பசுமை வீடு, கறவை மாடுகள், விலையில்லா ஆடுகள் திட்டம் என அ.தி.மு.க., கொண்டு வந்த திட்டங்களை கைவிட்டனர்.

மாணவர்களின் அறிவுபூர்வ கல்விக்கு லேப் டாப் வழங்கியதையும் நிறுத்திவிட்டனர். மொத்தம் 52.35 லட்சம் பேருக்கு ரூ.7305 கோடியில் அத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

ஏழை மாணவர்கள் படிப்பை முடக்கியது தி.மு.க., அரசு. அரசு பள்ளியில் 3.80 லட்சம் பேர் படிக்கின்றனர். அவர்களின் மருத்துவர் கனவைநனவாக்க 7.5 சதவீம் உள் ஒதுக்கீடு தந்து, 2818 பேர் மருத்து படிப்பு மூலம் பயன் பெற்றுள்ளனர்.

விழுப்புரத்தில் பிரமாண்ட சட்ட கல்லுாரி, மகளிர் கல்லுாரி என பல கல்லுாரிகளை நாங்கள் தந்தோம். கல்விக்கு அடித்தளம் அமைத்தது அ.தி.மு.க., அரசு தான்.

திமுக அறிவித்த 565 வாக்குறுதியில் எதுவும் செய்யவில்லை. 100 நாள் வேலையை, 150 நாளாக உயர்த்தவில்லை, 50 நாளாக குறைந்துவிட்டனர். இத்திட்ட நிதியை நாங்கள் மத்திய அரசிடம் கேட்டு ரூ.2500 கோடி வாங்கி கொடுத்தோம். தமிழக அரசு சரியாக கணக்கு தரவில்லை என்றனர்.

மகளிருக்கு மாதம் ரூ.1,000 திட்டத்தை, நாங்கள் சட்டசபையிலும், பொது கூட்டத்திலும் வலியுறுத்தியதால் தான், 22 மாதம் கழித்து தந்தனர். அதுவும் 1 கோடி பேருக்கு தந்தனர். அனைவருக்கும் தரப்படும் என கூறி ஏமாற்றினர். தற்போது, ஆட்சியின் செல்வாக்கு போனதால், மேலும் 30 லட்சம் பேருக்கு தருவதாக பொய் பிரச்சாரம் செய்கின்றனர்.

அடுத்து வரும் தேர்தலுக்காக பெண்களை ஏமாற்றவே இந்த அறிவிப்பு. தமிழகத்தில் நகரம், பேரூராட்சிகளில் வரியை உயர்த்திவிட்டனர். 100 சதவீதம் கடை, வீட்டு வரி உயர்வு வந்துவிட்டது. விலை வாசியும் உயர்ந்துவிட்டது. வருமானம் குறைந்து, விலை வாசி உயர்ந்து மக்கள் துன்பப்படுகின்றனர். தமிழகத்தில் போதை விற்பனையால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. கொலை, கொள்ளை நடக்காத நாளே இல்லை. இதற்கு முடிவு கட்ட அ.தி.மு.க., ஆட்சிக்கு வர வேண்டும்.

கட்டுமான பொருள் விலை உச்சமாகி உள்ளது. தி.மு.க., தேர்தல் வாக்குறுதிப்படி நெல்லுக்கு ரூ.2500 தரவில்லை, கரும்புக்கு ரூ.4000 தரவில்லை.

கவர்ச்சியாக பேசி நம்பவைத்து ஏமாற்றி குடும்ப ஆட்சி தான் நடக்கிறது. கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என ஆள வந்துவிட்டனர். ஆனால், சாதாரணமான நாங்கள் ஆட்சி ஆளக்கூடாதா? அ.தி.மு.க., தான் ஜனநாயக கட்சி. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் தமிழகம் முதல் மாநிலமாக உயரும்.

டாஸ்மாக்கில் 10 ரூபாய் வசூலித்து ஏழை வயிற்றில் அடிக்கும் திமுக ஆட்சி. 1 நாளிற்கு 1.50 கோடி பாட்டில் விற்கிறது. ஆண்டுக்கு ரூ.5400 கோடி கொள்ளையடிக்கின்றனர்.

அதனால் தான் சிக்கிக்கொண்டு இப்போது அமலாக்கத்துறை விசாரணை நடக்கிறது. உச்ச நீதிமன்ற தடை நீங்கியதும், டாஸ்மாக் ஆயிரம் கோடி ஊழலில், பெரிய திமிங்கலமும் மாட்டப் போகிறது.

அரசுக்கு வரும் வருமானம் ஒரு குடும்பத்துக்கே போவதால், அரசுக்கு வருவாய் இல்லை. ஒரு குடும்பம் சுரண்டுகிறது. அதற்கு முடிவு கட்ட வேண்டும். இப்போது நடப்பது ஸ்டாலின் மாடல் அரசு இல்லை, பெயிலியர் மாடல் அரசு தான் நடக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us