/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பழனிசாமி, அண்ணாமலையை விமர்சித்து செஞ்சியில் போஸ்டர்
/
பழனிசாமி, அண்ணாமலையை விமர்சித்து செஞ்சியில் போஸ்டர்
பழனிசாமி, அண்ணாமலையை விமர்சித்து செஞ்சியில் போஸ்டர்
பழனிசாமி, அண்ணாமலையை விமர்சித்து செஞ்சியில் போஸ்டர்
ADDED : டிச 31, 2024 04:55 AM
செஞ்சி : செஞ்சியில் பழனிசாமி, அண்ணாமலையை விமர்சித்து போஸ்டர் ஒட்டியவர்கள் மீது இரு கட்சியினரும் தனித்தனியே போலீசில் புகார் செய்துள்ளனர்.
செஞ்சியில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரை விமர்சித்து சிலர் போஸ்டர் ஒட்டி வந்தனர். தகவல் அறிந்த அ.தி.மு.க.,வினர் மாவட்ட பிரதிநிதி குமரன் தலைமையில் செஞ்சி போலீசில் புகார் செய்தனர்.
இதேபோல, திருவண்ணாமலை சாலையில் போஸ்டர் ஒட்டிய மூன்று பேரை பிடித்து பா.ஜ., நகர தலைவர் தங்கராமு மற்றும் நிர்வாகிகள் செஞ்சி போலீசில் ஒப்படைத்து, புகார் செய்தனர்.
உயர் அதிகாரிகள் ஆலோசனை கேட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.