/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சியில் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு
/
செஞ்சியில் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு
ADDED : ஜூலை 12, 2025 11:18 PM

செஞ்சி: செஞ்சிக்கு வருகை தந்த அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு நிர்வாகிகள் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர்.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று முன்தினம் இரவு 'செஞ்சியில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' வேன் பிரசாரம் மேற்கொண்டார்.
மாவட்ட செயலாளர் சண்முகம் எம்.பி., தலைமை தாங்கினார்.
அவைத்தலைவர் கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் செஞ்சி மேற்கு கோவிந்தசாமி, கிழக்கு சோழன், மேல்மலையனுார் வடக்கு புண்ணியமூர்த்தி, தெற்கு பாலகிருஷ்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் பிரித்விராஜ், ஆனந்தபுரம் நகர செயலாளர் சங்கர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன், திண்டிவனம் எம்.எல்.ஏ., அரச்சுனன், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், ஜெ.பேரவை மாவட்ட துணை செயலாளர் பாலசுந்தரம், தொகுதி செயலாளர் வழக்கறிஞர் வேலவன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட பொருளார் அருண்தத்தன், பொதுக்குழு உறுப்பினர் சுலோச்சனா ஜெயபால், தொழிலதிபர் மாணிக்கம், கவுதம், ஜெ.பேரவை மாவட்ட துணை செயலாளர் மணிமாறன், மாவட்ட தொழில் நுட்ப பிரிவு இணை செயலாளர் சத்தியராஜ், செஞ்சி தொகுதி இணைச்செயலாளர் வழக்கறிஞர் லோகநாதன், முன்னாள் அரசு வழக்கறிஞர் புண்ணியகோட்டி, மாவட்ட பிரதிநிதி வழக்கறிஞர் சசிகலா, நிர்வாகிகள் சுந்தர், சரவணன், சையத் அஜீஸ், ஜெ.கமலக்கண்ணன், ஆர்.கமலக்கண்ணன், சுரேஷ், பத்மநாபன், பொன்னுரங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கரகாட்டம், செண்டை மேளத்துடன் பட்டாசு வெடித்து, பூங்கொத்து கொடுத்து சிறப்பான அவருக்கு வரவேற்பளித்தனர்.