sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கவர்னரின் உத்தரவு இல்லாமல் 7.5 சதவீத ஒதுக்கீட்டை நிறைவேற்றியவர் பழனிசாமி; மாஜி அமைச்சர் சண்முகம் பேச்சு

/

கவர்னரின் உத்தரவு இல்லாமல் 7.5 சதவீத ஒதுக்கீட்டை நிறைவேற்றியவர் பழனிசாமி; மாஜி அமைச்சர் சண்முகம் பேச்சு

கவர்னரின் உத்தரவு இல்லாமல் 7.5 சதவீத ஒதுக்கீட்டை நிறைவேற்றியவர் பழனிசாமி; மாஜி அமைச்சர் சண்முகம் பேச்சு

கவர்னரின் உத்தரவு இல்லாமல் 7.5 சதவீத ஒதுக்கீட்டை நிறைவேற்றியவர் பழனிசாமி; மாஜி அமைச்சர் சண்முகம் பேச்சு


ADDED : ஜன 31, 2024 05:23 AM

Google News

ADDED : ஜன 31, 2024 05:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டமங்கலம் : வானுார் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க., சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.

கண்டமங்கலம் ஒன்றியம் பள்ளித்தென்னல் கிராமத்தில் நடந்த விழாவிற்கு வானுார் எம்.எல்.ஏ., சக்கரபாணி தலைமை தாங்கினார். கண்டமங்கலம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் கண்ணன் வரவேற்றார். தெற்கு ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், சதீஷ்குமார், பக்தவச்சலம், கோட்டக்குப்பம் நகர செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் சண்முகம் எம்.பி., ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது;

தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடந்து வருகிறது. தமிழக மக்களுக்கு அநீதி இகைக்கப்படும்போது, உரிமைகள் பாதிக்கப்படும்போது அதை எதிர்த்து முதலில் குரல் கொடுக்கும் இயக்கமாக அ.தி.மு.க., உள்ளது.

தி.மு.க., ஆட்சியில் வீட்டு வரி 100 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. தி.மு.க.,விற்கு மக்களுக்கு நன்மை செய்யும் எண்ணம் துளியும் இல்லை. பிரதமர் மோடியை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த ஒரே முதல்வர் பழனிசாமி. கவர்னரின் உத்தரவு இல்லாமலேயே 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றிக் காட்டியவர் பழனிசாமி.

தி.மு.க., மக்களுக்கான கட்சி அல்ல. உதயநிதியின் குடும்பம் நாட்டை கொள்ளையடித்து வருகிறது. ஆகவே வரும் லோக்சபா தேர்தலில் மக்கள் விரோத ஆட்சியை அகற்ற பழனிசாமி தலைமையிலான கூட்டணிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அ.தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளர் கோபி காளிதாஸ், தலைமை கழக பேச்சாளர் அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.






      Dinamalar
      Follow us