தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வேட்பாளர் தேர்வில் பழனிசாமி கறார்: ஜகா வாங்கும் மாஜிக்கள்

 வேட்பாளர் தேர்வில் பழனிசாமி கறார்: ஜகா வாங்கும் மாஜிக்கள்

 வேட்பாளர் தேர்வில் பழனிசாமி கறார்: ஜகா வாங்கும் மாஜிக்கள்


ADDED : மார் 11, 2026 04:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 04:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

-நமது நிருபர்-: வரும் தேர்தலில் மாஜிக்கள் வேட்பாளர்களை பரிந்துரை செய்தால் தேர்தல் செலவை மாஜிக்கள் ஏற்க வேண்டும். தலைமை தேர்வு செய்தால் தலைமையே செலவை ஏற்கும் என வேட்பாளர் தேர்வில் பழனிசாமி கறார் காட்டுவதால் மாஜிக்குள் ஜகா வங்குவதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

ஜெ., இருந்தவரை சட்டசபைக்கான வேட்பாளர் தேர்வின் போது மாவட்ட செயலாளர்கள் பரிந்துரை செய்யும் வேட்பாளர் பட்டியலில், உளவுத்துறையிடம் பெறும் ரிப்போர்ட்டுடையும் ஒப்பிட்டு வேட்பாளர்களை தேர்வு செய்வார்.

சில இடங்களில் மாவட்ட செயலாளர்கள் தரும் பட்டியலில் இல்லாத புதுமுகங்களையும் களம் இறக்கி அதிர்ச்சியை ஏற்படுத்துவார்.

இந்த முறை பழனிசாமியும் அதே பாணியை கடைபிடிக்க இருப்பதாக கட்சி வட்டாரங்களில் கூறி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக எதிர்காலத்தில் கட்சியிலும், ஆட்சியிலும் ஏதேனும் பிரச்னை வந்தால், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் பின்னால் எம்.எல்.ஏ.,க்கள் செல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறுகின்றனர். அத்துடன் புதிதாக இளைஞர்களுக்கு வாய்ப்பு தரவும் முடிவு செய்துள்ளார்.

ஜெ., முதல்வராக இருந்தபோது அமைச்சர்கள் மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை கட்சி வளர்ச்சிக்காக கொடுத்து வந்தனர். ஜெ., மறைவுக்கு பிறகு பழனிசாமி முதல்வரானதும், அமைச்சர்கள் யாரும் தலைமைக்கு எந்த தொகையும் தரவில்லை. சம்பாதித்த தொகை முழுதும் அமைச்சர்களே வைத்து கொண்டனர்.

கடந்த சட்டசபை தேர்தலின் போது தனது ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கி கொடுத்த மாஜிக்கள் சிலர் தேர்தல் செலவில் சிக்கனம் காட்டி விட்டனர். இந்த நிலை மீண்டும் வராமல் இருக்க வேட்பாளர்களை பரிந்துரை செய்யும் மாஜிக்களிடம் வேட்பாளரை நீங்கள் முடிவு செய்தால் மொத்த செலவையும் நீங்களே செய்ய வேண்டும். தலைமை தேர்வு செய்தால் செலவை தலைமை பார்த்து கொள்ளும் என பழனிசாமி மாஜிக்களிடம் கறாராக தெரிவித்துள்ளார்.

இதனால் மாஜிக்கள் பலரும், தங்கள் பகுதியில் உள்ள தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி கொடுத்து விட்டு, ஜகா வாங்க முடிவு செய்திருப்பதாக கட்சி வட்டாரத்தில் கூறி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us