/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பழனிவேலு கல்விக்குழும தாளாளர் பெற்றோர் சதாபிஷேக விழா
/
பழனிவேலு கல்விக்குழும தாளாளர் பெற்றோர் சதாபிஷேக விழா
பழனிவேலு கல்விக்குழும தாளாளர் பெற்றோர் சதாபிஷேக விழா
பழனிவேலு கல்விக்குழும தாளாளர் பெற்றோர் சதாபிஷேக விழா
ADDED : ஜூலை 15, 2025 04:40 AM

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் பழனிவேலு மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் ராஜேந்திரன் பெற்றோர் ஜெயராமன் - சுலோச்சனா சதாபிஷேக விழா நடந்தது.
நல்லாண்பிள்ளைப்பெற்றாள் மீனாட்சி உடனுறை சொக்கநாதர் கோவிலில் நடந்த சதாபிஷேக விழாவிற்கு, சிவஜோதி மோனசித்தர் தலைமை தாங்கி ஆசி வழங்கினார். திருவண்ணாமலை ஆன்மிக இயக்க அருளாளர் அன்பழகன், செங்கமேடு முருகா போற்றி சுவாமிகள், ஓய்வு பெற்ற சி.இ.ஓ., ராஜேந்திரன், டாக்டர் மூர்த்தி.
குமார்ஸ் கல்வி நிறுவன தாளாளர் கோதகுமார், வி.ஆர்.பி., பள்ளி தாளாளர் சோழன், ஆலீவ் ட்ரீ தாளாளர் இளம்பரிதி முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை கீதா விருத்தகிரி, ஆசிரியை கிரிஜா முருகன், டாக்டர் ராஜேந்திரன், அக்ரி தேன்மொழி, ஜெயராஜ், ராஜேந்திரன் வரவேற்றனர்.
விழாவை முன்னிட்டு கண்புரை இலவச சிகிச்சை முகாம் நடந்தது. இதில் 30 பயனாளிகள் சென்னை சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
பழனிவேலு ஐ.டி.ஐ., முதல்வர் நுார்முகம்மது, மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் வாசுகி, மேலாளர் மஞ்சுளா விழா ஏற்பாடுகளை செய்தனர். பள்ளி நிர்வாகி தேன்மொழி ராஜேந்திரன் நன்றி கூறினார்.