/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வராகி அம்மனுக்கு பஞ்சமி வழிபாடு
/
வராகி அம்மனுக்கு பஞ்சமி வழிபாடு
ADDED : செப் 12, 2025 04:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: சுயம்பு சுத்தவராகி அம்மன் கோவில் பஞ்சமி வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம், செஞ்சி சாலையில் உள்ள டி.முத்தியால்பேட்டை கிராமத்தில் பழமை வாய்ந்த சுயம்பு சுத்தவராகி அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் நேற்று தேய்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. அம்மனுக்கு மாலை 4:00 மணிக்கு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது.
தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரவு 7:00 மணிக்கு தீபாராதனையும், இரவு 8:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.