/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஊராட்சி தலைவர் தாக்கு போலீஸ் விசாரணை
/
ஊராட்சி தலைவர் தாக்கு போலீஸ் விசாரணை
ADDED : அக் 05, 2024 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம்: திண்டிவனம் அருகே ஊராட்சி தலைவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மரக்காணம் ஒன்றியம், ஆத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் மன்னார்,70; ஊராட்சி தலைவர் மற்றும் அ.தி.மு.க., கிளைச் செயலாளர். இவரை, அதே ஊரை சேர்ந்த தி.மு.க., கிளைச் செயலாளர் ஏழுமலை,45; நேற்று காலை மொபைல் போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், மன்னார் போனை எடுக்கவில்லை.
அதில் ஆத்திரமடைந்த ஏழுமலை, மன்னாரை தேடிச் சென்று அவரை திட்டி, தாக்கினார். அதில், காயமடைந்த மன்னார் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.