/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி ஒன்றிய அலுவலகம் முன் ஊராட்சி தலைவர்கள் முற்றுகை
/
செஞ்சி ஒன்றிய அலுவலகம் முன் ஊராட்சி தலைவர்கள் முற்றுகை
செஞ்சி ஒன்றிய அலுவலகம் முன் ஊராட்சி தலைவர்கள் முற்றுகை
செஞ்சி ஒன்றிய அலுவலகம் முன் ஊராட்சி தலைவர்கள் முற்றுகை
ADDED : டிச 11, 2024 07:55 AM

செஞ்சி : ஊராட்சி தலைவரின் கணவர் மீது வழக்கு பதிந்ததை கண்டித்து ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செஞ்சி அடுத்த ஒட்டம்பட்டு ஊராட்சியில் கடந்த 6ம் தேதி ஊராட்சி தலைவரின் கணவர் திருமலை. வி.ஏ.ஓ., திருநாவுக்கரசை திட்டியதாக புகார் எழுந்தது. இது குறித்து இரு தரப்பிலும் அனந்தபுரம் போலீசில் புகார் செய்தனர். வி.ஏ.ஓ., திருநாவுக்கரசு புகார் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.
இதையடுத்து நேற்று செஞ்சி ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைபின் கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.
சங்க தலைவர் ரவி தலைமை தாங்கினார். செயலாளர் அய்யனார், பொருளாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.
இதில் ஒன்றியத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இதில் வி.ஏ.ஓ., மீது கொடுக்கப்பட்ட புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து வி.ஏ.ஓ.,க் களும் கிராமங்களில் தங்கி பணி செய்வதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து, மதியம் 1:00 மணியளவில் ஊராட்சி தலைவர் கணவர் மீது வழக்கு பதிவு செய்ததை கண்டித்து பி.டி.ஓ., அலுவலகம் எதிரே அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செஞ்சி இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, கோரிக்கை குறித்து பரிசீலனை செய்வதாக உறுதியளித்தார்.
அதனையேற்று 3:00 மணியளவில் கலைந்து சென்றனர்.