/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பணி ஆணை வழங்காததால் ஊராட்சி தலைவர்கள் பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
/
பணி ஆணை வழங்காததால் ஊராட்சி தலைவர்கள் பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
பணி ஆணை வழங்காததால் ஊராட்சி தலைவர்கள் பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
பணி ஆணை வழங்காததால் ஊராட்சி தலைவர்கள் பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
ADDED : ஜன 09, 2025 06:59 AM

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு முறையாக வேலை வழங்காததை கண்டித்து பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
திருவெண்ணெய்நல்லுார் ஊராட்சி ஒன்றியத்தில் 50 ஊராட்சித் தலைவர்கள் உள்ளனர். இந்நிலையில் ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் அரசு திட்ட பணிகளை ஊராட்சி தலைவர்கள் செய்வது வழக்கம்.
கடந்த சில மாதங்களாக ஊராட்சிகளுக்கு வரும் வேலைகளை ஊராட்சி தலைவர்களுக்கு வழங்காமல் ஆளுங்கட்சி தலையீடு காரணத்தினால் வந்த பணி ஆணையை வழங்காமல் அதிகாரிகள் நிறுத்தி அலைக்கழித்து வந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த 35 ஊராட்சி மன்ற தலைவர்கள் நேற்று மதியம் 2:00 மணி அளவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று முற்றுகையிட்டு பி.டி.ஓ., விடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பணி ஆணை விரைவில் வழங்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில். அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் அங்கிருந்து கலந்து சென்றனர்.
ஆளுங்கட்சி ஊராட்சி மன்ற தலைவர்களே பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.