/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஊராட்சி அலுவலக கட்டடம் திறப்பு விழா
/
ஊராட்சி அலுவலக கட்டடம் திறப்பு விழா
ADDED : ஆக 19, 2025 11:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார் : வானுார் முதல் நிலை ஊராட்சி அலுவலக புதிய கட்டடம் திறப்பு விழா நடந்தது.
வானுாரில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக ஊராட்சி அலுவலக கட்டம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு, ஊராட்சி தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். வானுார் பி.டி.ஓ.,க்கள் சுபாஷ் சந்திரபோஸ், மணிவண்ணன், மாவட்ட கவுன்சிலர் அன்புமணி, ஒன்றிய கவுன்சிலர் சசிகுமார் முன்னிலை வகித்தனர்.
விழாவில், ஒன்றிய சேர்மன் உஷா முரளி புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். ஒன்றிய செயலாளர்கள் மைதிலி ராஜேந்திரன், முரளி, துணைத் தலைவர் ஜெயகோபால், வார்டு உறுப்பினர் வாசுகி கலியபெருமாள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

