/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அவலுார்பேட்டையில் பங்குனி உத்திர விழா
/
அவலுார்பேட்டையில் பங்குனி உத்திர விழா
ADDED : ஏப் 12, 2025 05:17 AM

அவலுார்பேட்டை : அவலுார்பேட்டையில் பங்குனி உத்திர விழா நடந்தது.
அவலுார்பேட்டை சித்தகிரி முருகன் கோவிலில் 102வது பங்குனி உத்திரவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை மூலவருக்கு அபிஷேக, ஆராதனை, சக்திவேல் காவடி அபிஷேகம், அர்ச்சனை மகா தீபாரதனை, சக்திவேல் காவடி மற்றும் சேவார்த்திகள் ஊர்வலமும் நடந்தது. ஊராட்சி தலைவர் செல்வம் வரவேற்றார்.
மலை அடிவாரத்திலிருந்து 250க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தி புஷ்பரத தேர், டிராக்டர், மாட்டு வண்டி மற்றும் கல் உருளைகளை இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
மதியம் ஆன்மிக சொற்பொழிவும், மாலையில் சுவாமி திருக்கல்யாணமும் நடந்தது. இரவு வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.
ஆரணி எம்.பி., தரணிவேந்தன், செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார், மேல்மலையனுார் ஒன்றிய சேர்மன் கண்மணி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், துணை சேர்மன் விஜயலட்சுமி முருகன், மாவட்ட கவுன்சிலர் செல்வி ராமசரவணன்.
ஒன்றிய கவுன்சிலர் ஷாகின்அர்ஷத் , துணைத் தலைவர் சரோஜா ஐயப்பன், பாலமுருகன், மணியரசன், சம்பத், அறங்காவலர் குழு தலைவர் சுதாசெல்வம், அறங்காவலர்கள் லதா முரளி, விவேகானந்தன், வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.