ADDED : மார் 18, 2026 05:03 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் தேர்தல் பாதுகாப்பிற்காக துணை ராணுவத்தினர் கொடி அணி வகுப்பு நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டத்திற்கு தேர்தல் பாதுகாப்பிற்காக வந்துள்ள துணை ராணுவத்தினர் (பி.எஸ்.எப்.,), முக்கிய நகரங்களில் வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டளிக்க கொடி அணிவகுப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை விழுப்புரம் நகரில், பாதுகாப்பு ஒத்திகையாக கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்.
கீழ்பெரும்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தில் துணை ராணுவத்தினர் கொடி அணி வகுப்பு தொடங்கியது. விழுப்புரம் ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார் குப்தா, டி.எஸ்.பி., ஞானவேல், இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, முத்துக்குமரன் பங்கேற்றனர்.
துணை ராணுவத்தினருடன், விழுப்புரம் ஆயுதப்படை போலீசார், உள்ளூர் போலீசார் அணிவகுப்பில் பங்கேற்றனர். கீழ்ப்பெரும்பாக்கம் சண்முகபெருமாள் கோவில் வீதியில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று, திரவுபதி அம்மன் கோவில், அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நிறைவு செய்தனர்.
