/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு பெற்றோர், உறவினர்கள் போராட்டம்
/
மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு பெற்றோர், உறவினர்கள் போராட்டம்
மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு பெற்றோர், உறவினர்கள் போராட்டம்
மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு பெற்றோர், உறவினர்கள் போராட்டம்
ADDED : பிப் 11, 2025 06:48 AM

விழுப்புரம்; பள்ளி மாணவியின் மரணத்திற்கு நீதி விசாரணை கோரி பெற்றோர் மற்றும் உறவினர்கள் விழுப்புரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம், சீனிவாசா நகரை சேர்ந்த ஸ்ரீவித்யா மகள் கோவஸ்ரீ. இவர், கடலுார் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி, 9ம் வகுப்பு பயின்றார். இவர், கடந்த 7ம் தேதி, அங்குள்ள கழிவறை பகுதியில் துாக்கில் இறந்து கிடந்தார்.
கோவஸ்ரீயின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
இந்த நிலையில், நேற்று விழுப்புரம் தாட்கோ அலுவலகம் முன், மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவியின் மரணம் குறித்து நீதி விசாரணை செய்து, காரணமான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; பிரேத பரிசோதனையை தங்களுக்கு வீடியோ மூலம் காட்ட வேண்டும் என வலியுறுத்தினர்.
தாலுகா இன்ஸ்பெக்டர் செல்வவிநாயகம் தலைமையிலான போலீசார், பேச்சுவார்த்தை நடத்தினார். மாணவி சம்பந்தமான வழக்கு, நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணையில் உள்ளதாகவும், அவர்கள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என கூறியதன் பேரில், கலைந்து சென்றனர்.