/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு மகளிர் கல்லுாரி பகுதியில் திரியும் ரோமியோக்களால் பெற்றோர்கள் அச்சம்
/
அரசு மகளிர் கல்லுாரி பகுதியில் திரியும் ரோமியோக்களால் பெற்றோர்கள் அச்சம்
அரசு மகளிர் கல்லுாரி பகுதியில் திரியும் ரோமியோக்களால் பெற்றோர்கள் அச்சம்
அரசு மகளிர் கல்லுாரி பகுதியில் திரியும் ரோமியோக்களால் பெற்றோர்கள் அச்சம்
ADDED : ஆக 04, 2025 11:36 PM
வி ழுப்புரம் மகளிர் கல்லுாரி பகுதியில் திரியும் சில இளைஞர்களால் மாணவிகளின் கல்வி பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.
விழுப்புரம் பெரியார் நகர் அருகே சாலாமேடு பகுதியில் எம்.ஜி.ஆர்., அரசு மகளிர் கல்லுாரி உள்ளது. இக்கல்லுாரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
இக்கல்லுாரி மாணவிகள், விழுப்புரம் பஸ் நிலையத்திலிருந்து பஸ், ஷேர் ஆட்டோக்களில் பெரியார் நகர் வந்து, பிறகு 2 கி.மீ. தொலை விற்கு கல்லுாரிக்கு நடந்து செல்கின்றனர்.
தினசரி கல்லுாரிக்கு நடந்து செல்லும் மாணவிகளுக்கு, இடையூறாக இளைஞர்கள் சிலர் அந்த பகுதியில் திரிந்தபடி உள்ளனர்.
காலை மற்றும் மாலை வேளைகளில் பெரியார் நகர் பஸ் நிறுத்தம், திருச்சி சாலை, கல்லுாரி சாலை பகுதிகளில் பைக்குகளில் திரியும் சில ரோமியோக்கள், மாணவிகளை கிண்டல் செய்வது, அவர்களுக்கு காதல் வலை வீசுவது, பைக் சாகசம் செய்து மாணவிகளை கவர்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது
இதில் சிக்கும் ஒரு சில மாணவிகள், கல்லுாரி படிப்பை முடிக்காமலேயே காதல் திருமணம் என வெளியேறும் நிலை உள்ளது.
இதனால், மாணவிகள் வந்து செல்லும் காலை, மாலை வேளைகளில் மகளிர் போலீசார் ரோந்து சென்று, இது போன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ் நிறுத்தம், கல்லுாரி சாலைகளில் தேவையின்றி நிற்கும் இளைஞர்களை எச்சரித்து அனுப்ப வேண்டும், மாணவிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று, பெற்றோர் தரப்பில் வலியுறுத்துகின்றனர்.