/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சேக்ரட் ஹார்ட் பள்ளியில் பெற்றோர் தின விழா
/
சேக்ரட் ஹார்ட் பள்ளியில் பெற்றோர் தின விழா
ADDED : ஜூலை 28, 2025 10:12 PM

விழுப்புரம்; விழுப்புரம் சேக்ரட் ஹார்ட் கான்வென்ட் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியின் 87வது பெற்றோர் தின விழா நடந்தது.
விழாவிற்கு, பள்ளி தாளாளர் மலர்விழி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் தமிழக பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் கல்வி, விளையாட்டுகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அறிவழகன், சென்னை ஆங்கிலோ - இந்திய பள்ளிகளின் தலைமை நிர்வாக அதிகாரி முகமதுஅப்துல்லா, சென்னை திருச்சபை பாதிரியார் அருளானந்தம், மாவட்ட கல்வி அலுவலர் சேகர் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.