/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பூங்கா கட்டடம் புனரமைப்பு பணி ரூ. 3.15 கோடியில் துவக்கம்
/
பூங்கா கட்டடம் புனரமைப்பு பணி ரூ. 3.15 கோடியில் துவக்கம்
பூங்கா கட்டடம் புனரமைப்பு பணி ரூ. 3.15 கோடியில் துவக்கம்
பூங்கா கட்டடம் புனரமைப்பு பணி ரூ. 3.15 கோடியில் துவக்கம்
ADDED : ஜூலை 17, 2025 12:19 AM

வானுார் : இடையஞ்சாவடியில் பாரதியார் வாழ்வாதாரப் பூங்கா கட்டட புனரமைப்பு பணி ரூ.3 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் துவங்கியது.
வானுார் ஊராட்சி ஒன்றியம் இரும்பை ஊராட்சிக்குட்பட்ட இடையஞ்சாவடி கிராமத்தில் பாரதியார் வாழ்வாதாரப்பூங்கா கட்டடம் உள்ளது.
மகளிர் மேம்பாட்டிற்காக கட்டப்பட்ட இந்த பூங்கா கட்டடத்தை மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புனரமைக்க அரசு முடிவு செய்தது. இதற்காக ரூ. 3 கோடியே 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் வட்டார இயக்க மேலாளர் ராஜலட்சுமி வரவேற்றார்.
ஒன்றிய சேர்மன் உஷா முரளி, துணை சேர்மன் பருவகீர்த்தனா விநாயகமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மகளிர் மேம்பாட்டு நிறுவன உதவி திட்ட அலுவலர் மனுநீதி சோழன், மேலாளர் செந்தில் வாழ்த்தி பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக லட்சுமணன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, புனரமைப்பு பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், வானுார் பி.டி.ஓ.,க்கள் சுபாஷ்சந்திரபோஸ், மணிவண்ணன், மண்டல துணை பி.டி.ஓ.,க்கள் கவுதம், பாஸ்கர், விக்டர், ஒன்றிய பொறியாளர் குகன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் புஷ்பராஜ், மாரிமுத்து, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் முரளி, ராஜூ, பாஸ்கரன், மைதிலி ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய சேர்மன் சிவா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துவேல், மாவட்ட பிரதிநிதிகள் சங்கர், பாலு, வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.