sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 பகுதிநேர ரேஷன் கடை எம்.எல்.ஏ., கோரிக்கை

/

 பகுதிநேர ரேஷன் கடை எம்.எல்.ஏ., கோரிக்கை

 பகுதிநேர ரேஷன் கடை எம்.எல்.ஏ., கோரிக்கை

 பகுதிநேர ரேஷன் கடை எம்.எல்.ஏ., கோரிக்கை


ADDED : பிப் 21, 2026 04:58 AM

Google News

ADDED : பிப் 21, 2026 04:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: மயிலம் தொகுதியில் உள்ள கிராமப் புறங்களில் பகுதி நேர ரேஷன் கடைகள் துவங்க வேண்டுமென சிவக்குமார் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக சட்டசபையில் அவர் பேசுகையில், 'மயிலம் தொகுதிக்குட்பட்ட பல கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகளில், 1000க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் நீண்ட நேரம் காத்திருந்து அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டிய நிலை உள்ளது.

குறிப்பாக கொங்கரப்பட்டு, அவ்வையார்குப்பம் ஊராட்சி நடுக்குப்பம், சாத்தனுார் ஊராட்சி சித்தேரிப்பட்டு ஆகிய கிராமங்களில், புதிதாக பகுதிநேர ரேஷன் கடைகள் அமைத்துத் தர வேண்டும்' என்றார்.

இதற்கு பதிலளித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், 'தமிழகத்தில் 2000க்கும் மேற்பட்ட பகுதிநேர ரேஷன் கடைகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மயிலம் எம்.எல்.ஏ., குறிப்பிட்டவாறு, ஆயிரக்கணக்கான ரேஷன் கார்டுதாரர்கள் ஒரு ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க வேண்டிய நிலை இருக்குமானால், அவரது கோரிக்கை நிறைவேற்றப்படும்' என்றார்.






      Dinamalar
      Follow us