/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு கல்லுாரியில் பகுதிநேர படிப்பு
/
அரசு கல்லுாரியில் பகுதிநேர படிப்பு
ADDED : மார் 29, 2025 04:42 AM
விழுப்புரம்: விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரியில் பகுதிநேர படிப்பு பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது.
கல்லுாரி முதல்வர் சிவக்குமார் செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் மூலம் கடந்த ஜனவரி மாதம் முதல் டிசம்பர் வரை ஆண்டு மாணவர் சேர்க்கை விழுப்புரம் அரசு கலை கல்லுாரியில் நடக்கிறது.
பகுதிநேர படிப்பு தொடர விரும்பும் மாணவ, மாணவிகள், உயர்கல்விக்கு காத்திருக்கும் அலுவலர்களுக்காக இந்த கல்லுாரியில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மானிய குழு மூலம் அங்கீகரிக்கப்பட்டு இளங்கலை, முதுகலை பாடப்பிரிவுகள் நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளது.
இந்த பாட பிரிவுகளுக்கான அனைத்து வகுப்புகள் சனி, ஞாயிறு நாட்களிலும் மற்றும் பருவ தேர்வுகள் இந்த கல்லுாரியில் நடக்கிறது.
இதற்கான விண்ணப்பங்கள் கல்லுாரி அலுவலகத்தில் வரும் 31ம் தேதிக்குள் பெற்று சமர்பிக்க வேண்டும்.
அனைத்து மாணவ, மாணவிகள் மற்றும் உயர்கல்வி வாய்ப்பு எதிர்நோக்கியுள்ள அலுவலர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை வழியாக இளங்கலை பட்டம் பெற்ற பின், யு.பி.எஸ்.சி., - டி.என்.பி.எஸ்.சி., மத்திய, மாநில அரசு போட்டி தேர்வுகளை எழுதலாம்.
மேலும், இவர்கள் நேரடியாக முதுகலை படிப்புகளிலும் சேரலாம். முதுகலை படிப்பு முடித்தோர் செட், நெட், கேட் தேர்வுகளை எழுதலாம். நேரடி வகுப்புகளில் பிஎச்.டி., படிப்பில் சேரலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.