/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பயணிகள் நிழற்குடை : அமைச்சர் திறப்பு
/
பயணிகள் நிழற்குடை : அமைச்சர் திறப்பு
ADDED : ஜன 19, 2025 06:51 AM

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுாரில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மேலமங்கலம் கிராமத்தில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.6 லட்சம் செலவில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை திறப்பு விழா நேற்று நடந்தது.
முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணி தலைமை தாங்கினார். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் ஓம் சிவசக்திவேல், தி.மு.க., ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் மணிகண்டன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினரான அமைச்சர் பொன்முடி, பயணியர் நிழற்குடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கிளை செயலாளர்கள் பழனி, பன்னீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

