தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பஸ் நிலையத்தில் பயணிகள் தவிப்பு

பஸ் நிலையத்தில் பயணிகள் தவிப்பு

பஸ் நிலையத்தில் பயணிகள் தவிப்பு

1


UPDATED : அக் 10, 2026 09:41 PM

ADDED : அக் 10, 2026 09:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 09:41 PM ADDED : அக் 10, 2026 09:17 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் பஸ் நிலையத்தில், மேல்மலையனுாருக்கு போதிய பஸ்கள் இல்லாமல் பயணிகள் அவதிப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், நேற்று மகாளய அமாவாசையையொட்டி ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதற்காக, விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

இந்நிலையில், விழுப்புரத்திலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மேல்மலையனுாருக்கு புறப்பட்ட நிலையில்,

நேற்று மாலை 4:00 மணியிலிருந்து, விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில், செஞ்சி, மேல்மலையனுார் மார்க்க பஸ்களில் கூட்டம் அதிகரித்தது.

மாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை, ஏராளமான பயணிகள் திரண்டதால், மேல்மலையனுாருக்கு இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களில் முண்டியடித்துக்கொண்டு பயணிகள் ஏறிச்சென்றனர். போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படாததால், மேல்மலையனுார் புறப்பட்ட பயணிகள் நெரிசலில் சிக்கி கடும் அவதியடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us