/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறை நோயாளிகள் கடும் அவதி

ADDED : ஏப் 27, 2025 04:54 AM

திண்டிவனம் : திண்டிவனம் அரசு மருத்துவமனையில், டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
திண்டிவனம் அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி, 60 கோடி ரூபாய் செலவில் இரண்டு புதிய பிளாக்குகள் கட்டும் பணி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இங்கு, திண்டிவனம் மட்டுமின்றி, சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். ஆனால், நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க போதுமான சிறப்பு மருத்துவர்கள் இல்லை.
தோல் சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை, அறுவை சிகிச்சை,  சிறுநீரகவியல் உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளுக்கு டாக்டர்கள் இல்லை. இப்பிரச்னை நீண்ட காலமாக உள்ளது. அரசு மருத்துவ கல்லுாரியில் முதுகலை மருத்துவம் படிக்கும் டாக்டர்களை கொண்டு புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் இயங்கி வருகிறது.
3 பேர் பணியாற்றிய மருத்துவமனை ஆய்வகத்தில் தற்போது ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார். தினந்தோறும் நுாற்றுக்காணக்கான நோயாளிகள் ஆய்வகத்திற்கு வருவதால் ஒரு லேப் டெக்னிஷியனால் சமாளிக்க முடியவில்லை. இதனால், நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
சிறப்பு பிரிவு டாக்டர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை குறித்து, திண்டிவனம் எம்.எல்.ஏ. அர்ஜூனன், விழுப்புரம் மாவட்ட மருத்துவபணி இணை இயக்குனர் ரமேஷ்பிரபுவிடம் பல முறை புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
திண்டிவனம் அரசு மருத்துமனையை மாவட்ட கலெக்டர் ேஷக் அப்துல் ரகுமான் நேரடியாக ஆய்வு செய்து, டாக்டர் ஊழியர் பற்றாக்குறையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.