/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் கரும்பு விவசாயிகள் போராட்டம் ரத்து
/
தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் கரும்பு விவசாயிகள் போராட்டம் ரத்து
தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் கரும்பு விவசாயிகள் போராட்டம் ரத்து
தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் கரும்பு விவசாயிகள் போராட்டம் ரத்து
ADDED : நவ 28, 2024 07:30 AM

விக்கிரவாண்டி: கரும்பு விவசாயிகளுக்கு நிலுவையிலுள்ள லாப பங்குத்தொகையை வழங்க கோரி போராட்டம் அறிவித்தது குறித்து சமாதான கூட்டம் நடந்தது.
விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் ராஜ் ஸ்ரீ சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு லாபத்தொகையில் பங்கு தரக்கோரி வரும் 29 ம் தேதி சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தொடர் போராட்டம் அறிவித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் நடந்த சமாதான கூட்டத்திற்கு தாசில்தார் யுவராஜ் தலைமை தாங்கினார்.விக்கிரவாண்டி டி.எஸ்.பி., நந்தகுமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் ஆலை நிர்வாகம் தரப்பில், சர்க்கரை துறை இயக்குனரிடமிருந்து முறையான கணக்ககீட்டு தொகைக்கான உத்திரவினை இன்னும் 15 தினங்களுக்குள் பெற்று அதன் பிறகு 2004-2005 ஆண்டிற்கான பங்கு தொகை விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தி விடுவதாகவும்,மீதமுள்ள 2008-2009 ம் ஆண்டுக்கான பயனாளிகள் பட்டியல் பெறப்பட்டு மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைப்பதாக கூறினர். இதையடுத்து விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தை கைவிடுவதாகவும் கூறி சென்றனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், மண்டல துணை தாசில்தார் தட்சிணாமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் தெய்வீகன்,சர்க்கரை ஆலை தரப்பில் கரும்பு மேலாளர் கதிரவன்,துணை மேலாளர் சிவாஜி கணேசன் , விவசாயிகள் சங்கம் சார்பில் மா.கம்யூ., முன்னாள் எம்.எல்.ஏ.,ராமமூர்த்தி,மாவட்ட குழு கிருஷ்ணமூர்த்தி, சங்க செயலாளர் தாண்டவராயன் உட்பட பலர் பங்கேற்றனர்.