ADDED : அக் 05, 2024 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம், : மயிலம் ஒன்றிய கவுன்சிலர் சாதாரண கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ராமதாஸ் முன்னிலை வகித்தார். துணைச் சேர்மன் புனிதா வரவேற்றார். கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கிராமத்திற்கு மயான பாதை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து பேசினர்.
மேலும், தீவனுார் ஊராட்சியில் விநாயகர் கோவில் அருகே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாடக மேடை அமைப்பது உட்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.