/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரயில்வே குடியிருப்பு பகுதியில் தஞ்சமடையும் மயில், மான்கள்
/
ரயில்வே குடியிருப்பு பகுதியில் தஞ்சமடையும் மயில், மான்கள்
ரயில்வே குடியிருப்பு பகுதியில் தஞ்சமடையும் மயில், மான்கள்
ரயில்வே குடியிருப்பு பகுதியில் தஞ்சமடையும் மயில், மான்கள்
ADDED : மே 28, 2025 07:09 AM

விழுப்புரம் : விழுப்புரம் ரயில்வே குடியிருப்பு பகுதி மயில் மற்றும் புள்ளிமான்கள் தஞ்சமடையும் இடமாக மாறியுள்ளது.
விழுப்புரம் வடக்கு, தெற்கு ரயில்வே காலனி பகுதிகளில் தற்போது பொதுமக்கள் குடியிருப்பு குறைந்துள்ளது. இதனால், மரங்கள் படர்ந்து வளர்ந்துள்ளதோடு, பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்துள்ளது. பசுமையான காடுகள் போல வளர்ந்துள்ள ரயில்வே காலனி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மயில்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
மயில்கள் தங்களின் கூட்டங்களோடு அதிகமாக தஞ்சம் அடைகிறது. மாலை நேரத்தில் தோகை விரித்தாடும் காட்சி ரம்மியமாக உள்ளது. இது மட்டுமின்றி, மரங்கள் அடர்ந்து வளர்ந்து காடுகள் போல் உள்ளதால் புள்ளிமான்களும் வர துவங்கியுள்ளது.
மான், மயில்கள் வருவதை கண்காணிக்கும் சிலர், அதனை வேட்டையாடும் செயல்களில் ஈடுபடுகின்றனர். வனத்துறையினர் ரயில்வே குடியிருப்பு பகுதியில் தஞ்சமடையும் மான், மயில்களை வேட்டையாடுவோரிடம் இருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.