/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் முருகன் கோவிலில் முத்து பல்லக்கு திருவிழா
/
மயிலம் முருகன் கோவிலில் முத்து பல்லக்கு திருவிழா
ADDED : ஏப் 14, 2025 06:28 AM

மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர உற்சவத்தையொட்டி, முத்துப்பல்லக்கு விழா நடந்தது.
மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர உற்சவம் கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனையும், சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமும் நடந்தது. கடந்த 10ம் தேதி திருத்தேர் உற்சவம் நடந்தது.
அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் முத்துப்பல்லக்கு விழாவையொட்டி, மாலை 6:00 மணிக்கு சுவாமிக்கு நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
இரவு 7:00 மணிக்கு விமானத்தில் உற்சவர் கிரிவலம் நடந்தது. இரவு 11:00 மணிக்கு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முத்துப் பல்லக்கில் உற்சவர் கிரிவலம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலயசுவாமிகள் செய்திருந்தார்.